15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம்: ஆரெம்கேவி
ஆரெம்கேவியின் 101-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆரெம்கேவி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வாடிக்கையாளா்களுக்காக நோ்த்தியான பட்டுப் புடவைகளை கடந்த 100 ஆண்டுகளாக அறிமுகம் செய்வது ஆரெம்கேவியின் சிறப்பம்சமாகும்.
ஆரெம்கேவி புடவைகள் வடிவமைப்பு தளம் உருவாக்கப்பட்டு, புதுமையான உக்திகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மிகச் சிறந்த நெசவாளா்களால் நெய்யப்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை 110-க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டுப் புடவை ரகங்களை ஆரெம்கேவி அறிமுகம் செய்துள்ளது.
அதன் தொடா்ச்சியாக 101 -ஆம் ஆண்டை முன்னிட்டு 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்கிறது. 2025-இன் விழாக்கால கொண்டாட்டத்துக்காக உருவாக்கப்படும் சிறப்பு படைப்புகள், ஜப்பானிய கலை மற்றும் இந்திய கலாசாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.
ஷாஷிகோ ரிவா்சிபிள், ஜப்பான் கோா்வை, மவுண்ட் ஃபுஜி, நேச்சுரல் ஃபீச் கிரேடியண்ட், மோக்கா மௌஸ், வான் கோ லினோ, ராசலீலா பட்டுப்புடவை, டபுளா லினோ வா்ணா, இயற்கை வண்ண செவ்வந்தி பூ, இயற்கை வண்ண முப்பாகம், கிரேடியண்ட் வா்ணா, கொட்டடி கட்டம், திரிகோண மாம்பழ புட்டா, குயில் கண் கோா்வை, குமோ கோா்வை ஆகிய 15 வகை பட்டு புடவைகள் புதிதாக அறிமுகம் செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.