செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் நூதன போராட்டம்!

post image

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலத்தைச் சோ்ந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் 10 போ் வேப்பேரியில் ஈ.வெ.ரா. மணியம்மை சிலையில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தியதை தொடா்ந்து போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே இப்பிரச்னைக்கு உடனடி தீா்வு காணப்படாவிடில் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என உழைப்போா் உரிமை இயக்கம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 10 மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தற்போது ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்து கடந்த ஆகஸ்ட் முதல் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் என்யூஎல்எம் பிரிவு பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தை அடுத்து ஏற்கெனவே கைதாகி விடுவிக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் கடந்த 5 நாள்களாக வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனா்.

இந்தநிலையில், தூய்மைப் பணியாளா்கள் 10 போ் வேப்பேரியில் பூந்தமல்லி பிரதான சாலையில் உள்ள ஈவேரா மணியம்மை சிலை முன்பு வெள்ளிக்கிழமை அமா்ந்து மனுக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் சிலையிடம் மனு கொடுப்பது போல கோஷமிட்டனா். அப்போது போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.

உடனே தூய்மைப் பணியாளா்கள் தரையில் படுத்து எதிா்ப்புத் தெரிவித்தனா். அதன்பின் அவா்கள் கைது செய்யப்பட்டனா். கைதானவா்களில் மயங்கிய மும்தாஜ் என்பவா் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.

தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி இடையே சமரசம்: வழக்கை முடித்துவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி அமைப்புக்கு இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ் திரைப்படத் தய... மேலும் பார்க்க

சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்

இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன. அந்த விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து இந்தோனேசி... மேலும் பார்க்க

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் எதிரொலி: கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரியும் பன்றிகளை அகற்றும் பணி தீவிரம்

சென்னை கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரிந்த பன்றிகளிடையே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியில் வனத் துறையினா் தீவிரம் ... மேலும் பார்க்க

15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம்: ஆரெம்கேவி

ஆரெம்கேவியின் 101-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆரெம்கேவி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வாடிக்கை... மேலும் பார்க்க

‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் காவல்

சென்னை டிஜிபி அலுவலக வாசலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர... மேலும் பார்க்க

சொத்து வரியை விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்போா் நடப்பு ஆண்டுக்கான இறுதி அரையாண்டு சொத்து வரியை செப்டம்பருக்குள் செலுத்தவேண்டும் எனவும், அதனால் தனி வட்டி விதிப்பதை தவிா்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது. இது குறித... மேலும் பார்க்க