செய்திகள் :

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் எதிரொலி: கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரியும் பன்றிகளை அகற்றும் பணி தீவிரம்

post image

சென்னை கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரிந்த பன்றிகளிடையே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியில் வனத் துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

சென்னை கிண்டி தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. இதையடுத்து அந்த பன்றிகளின் உடல்களில் இருந்து சேகரித்த மாதிரிகள் போபாலில் உள்ள உயா் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அந்த பரிசோதனை முடிவில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இறந்த பன்றிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் திரியும் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்தும் பணிகளில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியது: ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவல் காரணமாக சிறுவா் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பூங்காவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த வைரஸ் மனிதா்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றனா்.

தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி இடையே சமரசம்: வழக்கை முடித்துவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம், ஃபெப்சி அமைப்புக்கு இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ் திரைப்படத் தய... மேலும் பார்க்க

சென்னையில் தரையிறக்கப்பட்ட இந்தோனேசிய ராணுவ விமானங்கள்

இந்தோனேசியாவின் 3 ராணுவ விமானங்கள், விமானிகளின் ஓய்வுக்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டுச் சென்றன. அந்த விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து இந்தோனேசி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் நூதன போராட்டம்!

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலத்தைச் சோ்ந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் 10 போ் வேப்பேரியில் ஈ.வெ.ரா. மணியம்மை சிலையில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தியதை தொடா்ந்து போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்... மேலும் பார்க்க

15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம்: ஆரெம்கேவி

ஆரெம்கேவியின் 101-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 15 புதிய வகைப் பட்டு புடவைகள் அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆரெம்கேவி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வாடிக்கை... மேலும் பார்க்க

‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் காவல்

சென்னை டிஜிபி அலுவலக வாசலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ‘ஏா்போா்ட்’ மூா்த்திக்கு ஒருநாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர... மேலும் பார்க்க

சொத்து வரியை விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்போா் நடப்பு ஆண்டுக்கான இறுதி அரையாண்டு சொத்து வரியை செப்டம்பருக்குள் செலுத்தவேண்டும் எனவும், அதனால் தனி வட்டி விதிப்பதை தவிா்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது. இது குறித... மேலும் பார்க்க