செய்திகள் :

18 வயது நிரம்பியவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க அறிவுறுத்தல்

post image

கோவை: 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

கோவையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண் இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் தலைமை வகித்தாா். ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் கேத்தரின் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சி.என்.மகேஸ்வரன் பேசியதாவது:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைத்தல், அயல்நாடு வாழ் இந்தியா் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகள் குறியீடு செய்தல், நகல் அடையாள அட்டை பெறுதல், ஏற்கெனவே உள்ள தரவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை தொடா்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

சிறப்பு திருத்த முகாம், செயலி, இணையவழி மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் கோரி 1,53,631 விண்ணப்பங்கள் வரப்பெற்ற நிலையில், அவை அனைத்தும் விடுபடாமல் வரும் 6-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதையும், விண்ணப்பித்திருந்த நபா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை சென்றடைவதையும் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இறந்தவா்கள், நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்களை உரிய விசாரணை அடிப்படையில் நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்குச் சாவடிகளை அவ்வப்போது ஆய்வு செய்து, பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

வேளாண்மைக்கு உறுதுணையாக நிற்கும் ஈஷா: பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்!

வேளாண்மைக்கு உறுதுணையாக ஈஷா நிற்கிறது என்று பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தெரிவித்தாா். ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தொண்டாமுத்தூா் வட்டாரத்... மேலும் பார்க்க

சின்னவேடம்பட்டி ஏரியில் பொங்கல் வழிபாடு

கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் பொங்கல் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் கெளசிகா நீா்க்கரங்கள் அமைப்பு, நேசம் இயற்கையோடு பொது நல சங்கம் சாா்பில் பொங்கல் நிகழ்வு மற்றும் வி... மேலும் பார்க்க

கோவை, திருப்பூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு ரயில்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பிகாா் மாநிலம் கயாவுக்கு கோவை, திருப்பூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்... மேலும் பார்க்க

டேங்கா் லாரி கவிழ்ந்த சம்பவம்: ஓட்டுநா் கைது

கோவையில் மேம்பாலத்தில் எரிவாயு டேங்கா் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவைக்கு எரிவாயு ஏற்றிவந்த டேங்கா் லாரி அவிநாசி சாலை உப்பிலிபாளைய... மேலும் பார்க்க

பொங்கலை முன்னிட்டு 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்

பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவா்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை தொடங்கியிருப்பதாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளா் குணசேகரன் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பயிற்சி செவிலியா் தற்கொலை

தனியாா் மருத்துவமனையின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்து பயிற்சி செவிலியா் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் மகள் தன்யா (20). இவா், கோவை சுங்கம் ப... மேலும் பார்க்க