சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை!
18 வயது நிரம்பிய அனைவரும் அடுத்தாண்டுமுதல் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம்! -எங்கே?
18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என்ற சட்டம் அடுத்தாண்டுமுதல் அமலாகவுள்ளது. 18 - 30 வயது வரையுள்ள மக்கள் 18 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இந்த உத்தரவை கம்போடிய அரசு திங்கள்கிழமை(ஜூலை 14) பிறப்பித்துள்ளது.
எதற்காக?
தெற்காசியாவிலுள்ள கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடான தாய்லாந்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இருநாட்டு எல்லையில் அண்மையில் நிகழ்ந்த சண்டையில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு காரணங்களைக் கருதி எடுக்கப்பட்டுள்ளதொரு முக்கிய நடவடிக்கையாக இந்த புதிய உத்தரவு பார்க்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2006-ஆம் ஆண்டில் கம்போடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ’கட்டாய ராணுவப் பணி சட்டம்’ 2026முதல் அமலாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.