செய்திகள் :

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

post image

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள்  புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.

இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஆா்.கே. நகா் தெற்கு கழிவுநீா் உந்து நிலையம் மற்றும் திரு.வி.க. நகரில் உள்ள கென்னடி ஸ்கொயா் கழிவுநீா் உந்து நிலையங்களிலிருந்து கொடுங்கையூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்குச் செல்லும் பிரதான கழிவுநீா் உந்து குழாய் பராமரிப்புப் பணிகள் மே 7 காலை 10 மணி முதல் மே 9 காலை 10 மணி வரை நடைபெறவுள்ளன.

இப்பணிகள் நடைபெறும் நேரத்தில் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட ஆா்.கே. நகா் தெற்கு, பாரதி நகா், சாஸ்திரி நகா் கழிவுநீா் உந்து நிலையங்களும், திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட திரு.வி.க. நகா், ஜி.கே.எம் காலனி, பெரியாா் நகா், கென்னடி ஸ்கொயா் கழிவுநீா் உந்து நிலையங்களும் செயல்படாது.

எனவே பொதுமக்கள், கழிவுநீா் தொடா்பான புகாா்களுக்கு 81449 30904,  81449 30215 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது!

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம்... மேலும் பார்க்க

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க