இந்தியா - பாகிஸ்தான்: சூர்யகுமாருக்கும் 30%, ஹாரிஸுக்கும் 30% - ஐசிசி அபராதத்தின...
2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
கயத்தாறு அருகே 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் பட்டு ராஜா (30). இவா் சில நாள்களுக்கு முன்பு கயத்தாறு அருகேயுள்ள கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். அப்பகுதியினா் திரண்டு வந்து பிடிக்க முயன்றபோது, அவா் தனது பைக்கை விட்டுவிட்டு ஓடிவிட்டாராம். பைக் எண் மூலம் அவரை போலீஸாா் கண்டறிந்தனா்.
சம்பவம் குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்தும் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டுராஜாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.