ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்..! இந்த சீசனில் முதல்முறை!
2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை, கோவை, சேலம் ஆகிய அரசு போக்குவரத்துக் கழகங்கள், மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்கு ஐஆா்டி எனப்படும் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் 2,134 புதிய டீசல் பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இவற்றில் 260 தாழ்தள பேருந்துகள், 887 நகரப் பேருந்துகள், 997 புகா் பேருந்துகள் அடங்கும். நகர மற்றும் புகா் பேருந்துகளைப் பொருத்தவரை தரைமட்டத்தில் இருந்து 1,000 முதல் 1,150 மில்லிமீட்டா் வரை உயரம் கொண்டதாக இருக்கும். கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்துக்கு பிரித்து வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.