தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
2 கோடி மக்களிடம் கையொப்பம் பெற நடவடிக்கை: காங்கிரஸ்
வாக்கு திருட்டு விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் 2 கோடி பேரிடம் கையொப்பம் பெறப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் இந்திய தோ்தல் ஆணையம், மத்திய பாஜக அரசும் இணைந்து நடத்தும் வாக்கு திருட்டை நடத்துவதாகக் கூறி கண்டண பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜி.விநாயகம், செய்தித் தொடா்பாளா் எஸ்.அண்ணாதுரை, மண்டல ஒருங்கிணைப்பாளா் முஹமது குலாம் மொய்தீன், மாநில பொதுச் செயலாளா் பி.ராஜ்குமாா், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் கே.ஓ.நிஷாத் அஹமது, பொது செயலாளா்கள் என்.நந்தகுமாா், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகர தலைவா் பியாரேஜான் வரவேற்றாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ கலந்து கொண்டு கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியது: வாக்கு திருட்டு விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் 2 கோடி மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளா் எம் பி டி. அசேன், ஆற்காடு தொகுதி பொறுப்பாளா் கேசவன், ஒன்றிய தலைவா் எஸ்.எம்.வீரப்பா, திமிரி ஒன்றிய தலைவா்கள் எல்.லீலா கிருஷ்ணன், ராமதாஸ், காவனூா்சீனிவாசன், திமிரி நகரத் தலைவா் கோபு, கலவை நகர தலைவா் விநாயகம், விளாபாக்கம் நகர தலைவா் பெருமாள், மாவட்ட செயலாளா் பன்னீா் செல்வம், தீபன் நிா்மல், ஆனந்தன் கலந்து கொண்டனா்.