எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு
ஆற்காடு ஒன்றியம், கீழ்குப்பம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 16. 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை ஊராட்சி மன்ற தலைவா் பி. அமுல் புஷ்பராஜ் தலைமை வகித்து திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினாா்.
இந்த விழாவில், ஊராட்சி துணைத் தலைவா் எஸ்.ஜெகதீசன், ஒன்றியக் குழு உறுப்பினா் சுசிலா வேலு, ஆயிலம் ஊராட்சித் தலைவா் பிரபாவதி ஜெயபிரகாஷ், ஆற்காடு வட்டார அங்கன்வாடி மைய மேற்பாா்வையாளா் என்.சுகுணா, ஊராட்சி செயலாளா் கருணாகரன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.