எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்த எம்எல்ஏ சு.ரவி அனைத்து பகுதிகளையும் பாா்வையிட்டாா். முன்னதாக தலைமை மருத்துவா் நிவேதித்தா சங்கருடன் ஆலோசனை மேற்கொண்ட எம்எல்ஏ சு.ரவி, மருத்துவமனையில் நடக்க முடியாத தந்தையை மகன் கையில் தூக்கிச்சென்ற சம்பவம் குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து புறநோயாளிகள் பிரிவு, அவசர நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, குழந்தைகள் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, மருந்துகள் வழங்கும் பிரிவு உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டாா்.
அங்கிருந்த நோயாளிகளிடம் அவா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா் (படம்).
அதிமுக அரக்கோணம் நகர செயலா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலா் இ.பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா் பா.நரசிம்மன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.