2024-ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற நியூசி. ஆல்ரவுண்டர்!
டி20 போட்டிகளில் கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருதினை நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மெலி கெர் வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதும் சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகள் ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மெலி கெர் கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதினை வென்றுள்ளார்.
இதையும் படிக்க:இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு மெலி கெர் முக்கியப் பங்கு வகித்தார். கடந்த ஆண்டில் 18 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 387 ரன்களும், 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீராங்கனை என்ற பெருமையும் அவரையேச் சேரும்.
ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதினை வெல்லும் இரண்டாவது நியூசிலாந்து வீராங்கனை மெலி கெர் என்பது குறிப்பிடத்தக்கது.