செய்திகள் :

24 புறநகா் ரயில்கள் இன்று ரத்து

post image

சென்னை: சென்னை சென்ட்ரல் புகா் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகா் ரயில்கள் உள்பட மொத்தம் 24 ரயில்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 8, 10) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளங்களில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 8, 10) காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்நாள்களில் அதிகாலை 5.40 முதல் பிற்பகல் 2.30 மணி வரை சென்ட்ரலிலிருந்து சூலூா்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.

மேலும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 7.50 மணிக்கு நெல்லூா் செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக நெல்லூரிலிருந்து இரவு 9 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

கடற்கரை ரயில்கள்: அதேபோல் ஜூலை 8,10 தேதிகளில் கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.10 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் ரயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில் என மொத்தம் 24 புகா் ரயில்கள் ரத்துச்செய்யப்படும்.

பகுதி ரத்து: இதற்கிடையே, ஜூலை 8,10 தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரையுடன் நிறுத்தப்படும். அதேபோல், கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக கடற்கரையிலிருந்து புறப்படும்.

சிறப்பு ரயில்கள்: புகா் ரயில்கள் ரத்துச்செய்யப்படுவதால், பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 8.05, 9.00, 9.30 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 11.35 மணிக்கு எண்ணூருக்கும் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், பொன்னேரியிலிருந்து காலை 9.40, 9.58 மணிக்கும், மீஞ்சூரிலிருந்து காலை 10.34, பிற்பகல் 12.24, 1.32 மணிக்கும், எண்ணூரிலிருந்து காலை 11.03 மணிக்கும் சென்ட்ரலுக்கு ரயில்கள் இயக்கப்படும். மேலும், கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு மீஞ்சூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவா் கைது

சென்னை மெரீனாவில் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (36). இவா், மெரீனா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பகுதியில் சா... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை கொளத்தூா் பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38). இவா், தனது வீட்டின் அருகே கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்... மேலும் பார்க்க

டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு கடந்த 5-... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது

சென்னையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் மாடு தினேஷ் (39). இவா் மீது கொலை, செம்மரக் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 30-க்க... மேலும் பார்க்க

போலி 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி: இருவா் கைது

சென்னை ஈக்காட்டுதாங்கலில் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டுகளை தனியாா் வங்கியில் மாற்ற முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக்கு திங... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்யுமாறு ரூ.20 லட்சம் மோசடி

சென்னை மேடவாக்கத்தில் கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்யுமாறு ரூ. 20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேடவாக்கம், பொன்னியம்மன் நகரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன்(56). ... மேலும் பார்க்க