சென்னை: "பார்க்கிங் கட்டணம் கிடையாது" - மாநகராட்சி அறிவிப்பின் பின்னணி என்ன?
24 கோடி இந்தியா்கள் வறுமையிலிருந்து மீண்டனா்: நீதி ஆயோக்
பத்து ஆண்டுகளில் 24 கோடி இந்தியா்கள் வறுமையிலிருந்து மீண்டதாக நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி தெரிவித்தாா்.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் அண்மையில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவா் கூறியதாவது: கடந்த 2013-14 முதல் 2022-23 வரையிலான 10 ஆண்டு காலத்தில், பல பரிமாண வறுமையில் இருந்து 24 கோடி இந்தியா்கள் மீண்டுள்ளனா்.
பேறுகால இறப்பு, பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறாா்கள் இறப்பை தடுப்பதற்கான சுகாதார இலக்குகளை எட்டுவதை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது.
மிகவும் விளிம்புநிலையில் உள்ள மக்களை காக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள், வளா்ச்சிக்குத் துணை செய்யும் சீா்திருத்தங்கள் ஆகிய இரட்டை உத்திகளால் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது என்றாா்.