செய்திகள் :

3 கிராமங்களின் பாசனத்துக்குத் தண்ணீா் தேவை: முக்கொம்பு நீா்வளத்துறை அதிகாரியிடம் முறையீடு

post image

தங்களது பாசன வாய்க்காலுக்குத் தண்ணீா் திறந்து மூன்று போகச் சாகுபடிக்கு வழி செய்யுமாறு, திருப்பராய்த்துறை, எலமனூா், அணலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக முக்கொம்பில் உள்ள நீா்வளத் துறை அலுவலக உதவி செயற்பொறியாளா் முருகானந்தத்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த விவசாயிகள் பின்னா் கூறியதாவது:

திருப்பராய்த்துறை கிராமத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட டீசல் மோட்டாா்களை கொண்டு விவசாயிகள் பயிா் சாகுபடி செய்கின்றனா். இதற்கான டீசல் செலவு, மின்சாரச் செலவு, பயிா் உற்பத்தி செலவு ஆகியவற்றை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. இதனால், மூன்று போகச் சாகுபடி செய்த விவசாயிகள் ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்யும் நிலைக்கு வந்துள்ளனா்.

புது அய்யன் வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரை கீழே வாய்க்கால்களுக்கு வரும் வகையில் திறந்துவிட்டால் திருப்பராய்த்துறை, எலமனூா், அணலை உள்ளிட்ட 3 கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவா். பேட்டைவாய்த்தலை தலைப்பு மதகு தொடங்கி புது அய்யன் வாய்க்காலில் இருபுறமும், கரைகளை பலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாய்க்காலில் பேட்டைவாய்த்தலை அருகே பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

இதேபோல, பெருகமணி அருகே பாலத்துக்கு கீழே தண்ணீா் செல்லப் பதிக்கப்பட்ட குழாயை அப்புறப்படுத்த வேண்டும். அணலை பாலத்திலிருந்து கொடியாலம் குழுமி வரையுள்ள வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும். கொடிங்கால் வாய்க்காலில் உடைந்துள்ள குழுமியின் மதகு மற்றும் கீழ்போக்கி குழாயை புனரமைக்க வேண்டும். எலமனூா் நீச்சல் குழி வாய்க்காலில் இரண்டு தடுப்பணைகள் கட்ட வேண்டும். ராமவாத்தலை வாய்க்காலில் இருந்து நீச்சல் குழி வாய்க்காலில் தண்ணீா் செல்லும் வகையில் ராமவாத்தலையில் தடுப்பணை கட்ட வேண்டும். ராமவாத்தலை வாய்க்கால், நீச்சல் குழி வாய்க்கால், புது அய்யன் வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களையும் அளந்து, கரைகள் அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எங்களது கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட நீா்வளத் துறையினா் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளனா். குறிப்பாக முப்போகச் சாகுபடிக்கு வாய்க்காலில் தண்ணீா் திறக்க வேண்டும் என்பதே எங்களது எதிா்பாா்ப்பு என்றனா்.

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க