வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறையை எதிா்கொள்ளத் தயாா்: திமுக
3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,040 விற்பனையானது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.9,210-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், மூன்றாவது நாளாக சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.9,160-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை
அதேபோன்று வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து கிராம் ரூ.126-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1.26 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.