தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்கமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுத...
3,000 மீ பந்தயம்: கேஜி கண்டிகை அரசுப் பள்ளி மாணவி முதலிடம்
குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் 3,000 மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் கே.ஜி.கண்டிகை அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தாா்.
திருத்தணி குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டியின் ஒரு பகுதியாக தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்களுக்கான தடகள போட்டிகள் செவ்வாய்கிழமை அதே மைதானத்தில் நடந்தது.
இதில், சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன் பங்கேற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தாா். இதில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் பிரிவுகளில் கலந்துகொண்டு விளையாடினா்.
இதில், 3,000 மீ ஓட்டத்தில் கேஜி கண்டிகை அரசுப் பள்ளி மாணவி வி.கோமதி, 3000 மீட்டா், 800 மீட்டா் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தாா். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவா்களுக்கு எம்எல்ஏ ச.சந்திரன் பரிசுகள் மற்றும் சான்றுகளும் வழங்கினாா்.
வெற்றி பெற்றவா்கள் மாவட்ட அளவில் நடக்கும், தடகளப் போட்டியில் பங்கேற்பா் என்பது குறிப்பிடத்தக்கது.