செய்திகள் :

300 கிலோ எடையுடன் சிறைக்கைதி! ஒருநாள் பராமரிப்புச் செலவு ரூ.1 லட்சமா?

post image

ஆஸ்திரியா நாட்டில், 300 கிலோ எடையுடன், சிறையில் ஒரு கைதி அடைக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு சராசரி சிறைக் கைதிக்கான பராமரிப்புச் செலவை விட பத்து மடங்கு அதிகம் இவருக்கு மட்டும் செலவாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 29 வயதான கைதிக்காக, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டுமா என்று, இந்த செய்தி வெளியானதிலிருந்து அந்நாட்டு மக்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

இந்த நபரின் வீட்டில் சோதனை செய்தபோது, ஏராளமான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் இவரை வியன்னா சிறையில் அடைத்திருக்கிறார்கள். அங்கு இவரை பராமரிக்க முடியவில்லை என்று கூறி கோர்நெபர்க் சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள்.

இந்த சிறையில் இவருக்காக சில பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரும்புக் கம்பிகளை வெல்டிங் செய்து பெரிய கட்டிலும், இவருக்காக கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை கவனிக்க செவிலியரும் பணியமர்த்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறாராம்.

இதன்படி, அந்த நாட்டின் நீதித்துறை வெளியிட்டிருக்கும் தகவலில், ஒரு சிறையில் இருக்கும் கைதிக்கு நாள் ஒன்றுக்கு பராமரிப்புச் செலவு என்பது ரூ.6000 ஆக இருக்கும் நிலையில், இவரைப் பராமரிக்க ரூ.1.6 லட்சம் ஆவதாகவும், (ஒரு நாளைக்கு) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி, உள்நாட்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சாதாரண குடிமகன், மருத்துவரைப் பார்க்க ஒருமாதத்துக்கும் மேல் முன்பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் நாடு இருக்கிறது. ஆனால், ஒரு கைதிக்கு நாட்டின் வளம் மற்றும் குடிமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறதே என்று அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சிறைக் கைதிகளுக்கான செலவுகள் மற்றும் சிறைப் பராமரிப்புக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவது குறித்து அந்நாட்டில் பெரிய விவாதமே வெடித்திருக்கிறது.

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில், ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டின் 5 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்ல... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!

வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலைய... மேலும் பார்க்க

வான்வழித் தாக்குதலில் போகோ ஹராம் மூத்த தலைவர் கொலை! நைஜர் ராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாத அமைப்பான போகோ ஹராமின், மூத்த தலைவரைக் கொன்றுள்ளதாக நைஜர் நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான போகோ ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு வசிரிஸ... மேலும் பார்க்க

5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை: அமெரிக்கா அறிவிப்பு! இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர்!!

அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறு ஆய்வு செய்யப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி வ... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது!

அரசு நிதியை சொந்த காரணங்களுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்தபோது அரசு நிதியில் சொந்தமாக பயணங... மேலும் பார்க்க