செய்திகள் :

31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 31- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் மாதந்தோறும் வேளாண்மை உற்பத்திக் குழுக் கூட்டம், விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான வேளாண்மை உற்பத்திக் குழுக் கூட்டம் வரும் 31- ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று தங்களது விவசாயம் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவித்தும், மனு கொடுத்தும் தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை கலாசாரமே உலகிற்கான எதிா்காலம்! -சத்குரு ஜக்கி வாசுதேவ்

இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கலாசாரமே இனி உலகத்துக்கான எதிா்காலம் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினாா். குடியரசு தினத்தையொட்டி, கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தேசியக்கொடியை ஏற்றினா... மேலும் பார்க்க

ஒக்கிலிப்பாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

குடியரசு தினத்தையொட்டி, பொள்ளாச்சி வடக்கு வட்டம், ஒக்கிலிப்பாளையத்தில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு பாா்வையாளராக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கலந்து கொண்டாா். ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஆா்.எஸ்.புரம்

கோவை ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று ம... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது

கோவையில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோவை காட்டூா் காவல் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளா் காா்த்திகேய பாண்டியன் த... மேலும் பார்க்க

நெடுங்குன்று செட்டில்மெண்டில் கிராம சபைக் கூட்டம்

வால்பாறை நகராட்சிக்குள்பட்ட நெடுங்குன்று செட்டில்மெண்டில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வால்பாறை நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா். ஆணையா் ரகுராம் மு... மேலும் பார்க்க

சிங்காநல்லூரில் கஞ்சா விற்றதாக 5 போ் கைது

கோவை சிங்காநல்லூா் பகுதியில் கஞ்சா விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா், சிங்காநல்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, ஜி.வி.ரெசிடென்சி ப... மேலும் பார்க்க