செய்திகள் :

39 மனைவிகள், 94 குழந்தைகள்; `உலகின் மிகப்பெரிய குடும்பம்' இதுதான்!

post image

உலகின் மிகப்பெரிய குடும்பமாக மிசோரம் இல் உள்ள ஒரு குடும்பம் அடையாளம் பெற்றுள்ளது. சியோனா சனா என்ற நபர் 39 முறை திருமணம் செய்து கொண்டு, 94 குழந்தைகளுக்கு தந்தையாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 33 பேர குழந்தைகளும் உள்ளனர்.

அவரது குடும்பம் 2011 -ம் ஆண்டில் உலக சாதனை அகாடமி, 2011 -ல் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் 2019 -ல் லண்டன் உலக சாதனைகளால் உலகின் 'மிகப்பெரிய குடும்பம்' என்று பட்டியலிடப்பட்டது.

இவ்வளவு பேர் இருக்கும் வீட்டிற்குள் அமைதியும் ஒழுங்கையும் பராமரித்த திறனுக்காக சியோனா சனா கவனம் பெற்றார்.

1945-ம் ஆண்டு பிறந்த சியோனா தனது முதல் மனைவியான ஜதியாங்கியை 17 வயதில் மணந்தார், பின்னர் தனது கடைசி மனைவியை 2004-ல் மணந்தார். அவருக்கு மொத்தம் 39 மனைவிகள்.

சியோனா தனது பரந்த குடும்பத்திற்காக பக்தாங் என்ற இடத்தில் நான்கு மாடி மாளிகையைக் கட்டினார். அதற்கு 'சுவான் தார் ரன்' என்று பெயரிட்டார். இதற்கு புதிய தலைமுறை வீடு என்று அர்த்தமாம்.

100 அறைகளைக் கொண்ட இந்த வீடு, குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வசதியாக தங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இப்போது ஒரு சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

சியோனா

39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரன்கள் என அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சியோனாவுக்கு 75 வயதில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் நோய்வாய்ப்பட்டு 2021ஆம் ஆண்டு சியோனா மரணமடைந்தார்.

இவரது இறப்பிற்கு பிறகும் அந்த குடும்பம் இன்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் மீண்டும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

``சிறையில் ஒன்றாக இருக்க அனுமதியுங்கள்..'' - கணவனை கொன்ற மீரட் ஜோடி போதைப்பொருள் கேட்டு பிடிவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை முஸ்கான் என்ற பெண் தனது புதிய காதலன் சாஹிலுடன் சேர்ந்து இம்மாத தொடக்கத்தில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

`Snickers தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர்' - நண்பர்கள் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!

Snickers தீமில் சவப்பெட்டி வேண்டும் என்று விளையாட்டாக ஒருமுறை கேட்ட நபருக்கு, அவரது விருப்பப்படியே அடக்கம் நடந்துள்ளது. வாழ்க்கை எல்லாருக்கும் நாம் நினைத்தபடி அமைவதில்லை. மரணமும் அப்படியே. ஆனால் பால் ... மேலும் பார்க்க

Wolfdog: 'ஓநாயுடன் கலப்பு' - ரூ.50 கோடிக்கு அரிய வகை நாயை வாங்கிய பெங்களூரு நபர்!

உலகம் முழுவதுமே மனிதர்களிடம் பிரபலமான செல்லப்பிராணியாக நாய்கள் இருக்கின்றன. நாய்கள் அதன் மேல் அதன் உரிமையாளர்கள் கொண்டிருக்கும் அன்பும், ஒரு நல்ல நாய்க்காக அவர்கள் செய்யும் விஷயங்களும் ஆச்சர்யப்படுத்த... மேலும் பார்க்க

வரலாற்றுச் சிறப்பு மிக்க மும்பை பங்களாவை ரூ.276 கோடிக்கு வாங்கிய அம்பானி உறவினர் - யார் இவர்?

மும்பையில் சொத்து விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தென்மும்பை, பாந்த்ரா, அந்தேரி போன்ற சில பகுதியில் வீடுகளின் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. மும்பையின் தென... மேலும் பார்க்க

MrBeast: பள்ளிக் குழந்தைகளுக்கு சொந்த செலவில் காலை உணவு வழங்கும் யூடியூபர், என்ன சொல்கிறார்?

மிஸ்டர் பீஸ்ட் என்று மக்களால் அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன், அமெரிக்காவின் கேன்சஸ் பகுதியில் வசித்து வருகிறார். 2012-ல் Mr Beast யூடியூப் சேனலை தொடங்கி, 2017-ல் அதிக சந்தாதாரர்கள் கொண்டு மிகப்பெரிய... மேலும் பார்க்க

``சட்ட விரோதமக குடியேறும் பங்களாதேஷ் பிரஜைகள்; நாடு கடத்துவதில் சிக்கல்.." - உள்துறை இணையமைச்சர்

அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வருபவர்கள் வேலை தேடி மும்பைக்கு வருவது அதிகரித்து இருக்கிறது. அது போன்று சட்டவிரோதமாக வருபவர்களுக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை... மேலும் பார்க்க