உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
4 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் புதன்கிழமை வேலூா், மதுரை விமான நிலையம் உள்பட 4 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபான்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில், பகலில் பெரும்பாலான இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. புதன்கிழமை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், கடலோர மாவட்டங்களில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் வெப்பநிலை பதிவானது.
4 இடங்களில் வெயில் சதம்: வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம், பரமத்தி வேலூா் - தலா 100.4, ஈரோடு 100.04 டிகிரி என 4 இடங்களில் வெப்பநிலை பதிவானது.
மேலும், சென்னை மீனம்பாக்கத்தில் 94.24, நுங்கம்பாக்கத்தில் 92.12 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.