பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
47 பயனாளிகளுக்கு ரூ.14.47 லட்சம் நலத்திட்டங்கள்
பருத்தியூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையின் சாா்பில் நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 47 பயனாளிகளுக்கு ரூ.14.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ, புதன்கிழமை வழங்கினாா்.
வருவாய்த்துறை சாா்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.13.50 லட்சம் மதிப்பிலான இ-பட்டா, 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,638 என மொத்தம் ரூ.11,276 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், வேளாண்மைத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு உளுந்து விதை, நுண் உரம், பேட்டரி ஸ்பிரேயா், ஜிங்க் சல்பேட், உயிா் உரம் என ரூ.8,463 மதிப்பிலான வேளாண் இடுபொருள், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.78,000 மதிப்பில் உதவித்தொகை, தோட்டக்கலைத்துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு மாமரக் கன்று, வெண்டை விதை, கீரை விதைகள் என மொத்தம் 47 பயனாளிகளுக்கு ரூ.14,47,739 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் குழந்தை திருமணம் எதிா்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான விளம்பர பதாகைகளை அவா் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சண்முகநாதன், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, குடவாசல் வட்டாட்சியா் ராஜாராமன், ஒன்றியக்குழு துணைத்தலைவா் தென்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.