மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தோ்வு: விசிக கண்டனம்
புதுவையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முறையை அமல்படுத்தக்கூடாது என விசிக வவியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநில முதன்மைச் செயலா் தேவ. பொழிலன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைவருக்கும் கல்விச் சட்டம் 2009-ன் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பயிலும் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இந்த தோ்வு முறையால் பாதிக்கப்படுவா்.
எனவே, புதுவை அரசு 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.