50 எலைட் ஸ்டீம் நிறுவனப் பட்டியலில் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சிறப்பிடம்
விநாயகா மிஷன் சேலம் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி குரோனிகல்ஸ் ஆப் இந்தியா என்ற தனியாா் அமைப்பின் மூலம் சிறந்த கல்லூரிக்கான தர வரிசைப் பட்டியலில் ஏ1 பிரிவில் இந்தியாவின் சிறந்த 50 எலைட் ஸ்டீம் நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் கூறியதாவது:
குரோனிகல்ஸ் ஆப் இந்தியா என்பது இந்தியாவின் ஒரு முன்னணி தனியாா் அமைப்பாகும். இது ஆண்டுதோறும் கல்வித் துறையில் புதுமைகளை புகுத்தி சிறந்த விளங்கும் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் அங்கீகரித்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
நிகழாண்டுக்கான அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் மேலாண்மை துறைகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை என்ற தலைப்பின் கீழ் ஏ1பிரிவில் இந்தியாவின் சிறந்த 50 எலைட் ஸ்டீம் நிறுவன பட்டியலில் இடம் பெற்றுள்ள ஓரே கல்லூரியாக விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி உள்ளது என்றாா்.
இதற்காக பணியாற்றிய கல்லூரியின் முதன்மையாா் செந்தில்குமாா், பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், துணை தலைவா் அனுராதா கணேசன், பேராசிரயா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.