செய்திகள் :

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

post image

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும்.

இதன்மூலம், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு மைக்ரோசாஃப்ட்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

செய்யறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூடிங் துறைகளில் கணிசமான வளர்ச்சியை எட்டிய பிறகும் மைக்ரோசாஃப்டில் அதிக எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

இது குறித்து மைக்ரோசாஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்முகத்தன்மை வாய்ந்த சந்தையில் வெற்றிப்பட்டியலில் மிகச்சிறந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதால், நிறுவனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிநீக்கமானது, ஊழியர்களின் வேலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதல்ல. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பணியில் சிறந்த பங்களிப்பை அளிக்காதவர்களை மைக்ரோசாஃப் பணிநீக்கம் செய்திருந்தது.

இம்முறை செய்யப்பட்டுள்ள பணிநீக்கமானது முற்றிலும் செய்யறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்கு முன்னுரிமை அளித்து, அதில் கவனம் செலுத்தும் வகையில் நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துவருவதன் ஒரு பகுதியாக இப்பணிநீக்கம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் லேசான நில அதிா்வு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது காந்தி நகரில் செயல்பட்டு வரும் நில அதிா்வுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, கட்ச் மாவட்டத்தின் பச்சௌ பகுதியிலிருந்து 12 கி.ம... மேலும் பார்க்க

உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலம், ஜெவாரில் ரூ. 3,706 கோடி செலவில் செமிகண்டக்டா் ஆலை அமைக்கப்பட உள்ளது. ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் கூட்டாக சோ்ந்து அமைக்கவுள்ள இந்த ஆலையில் கைப்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும... மேலும் பார்க்க

பாதுகாப்பு நிலவரம்: பிரதமா் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு நடைபெற்ற பாதுகாப்பு வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலை அடுத்து, எல்லைப் பகுதி மா... மேலும் பார்க்க

இந்திய மோதலில் காயமடைந்த 2 பாகிஸ்தான் வீரா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்தியாவுடனான மோதலில் காயமடைந்த 2 பாகிஸ்தான் வீரா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது. இதன்மூலம், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரா்களின் எண்... மேலும் பார்க்க

மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவ... மேலும் பார்க்க