சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
கோவையில் இருந்து மன்னாா்குடி, திருப்பதி, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் 6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் 6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி, கோவை - மன்னாா்குடி, மறுமாா்க்கத்தில் மன்னாா்குடி- கோவை இடையேயான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் ஆக.1 ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
அதேபோல கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக.1 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். மறுமாா்க்கத்தில் திருப்பதி - கோவை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக.2 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதிகொண்ட பெட்டி இணைக்கப்படும்.
இதுதவிர, கோவை - நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் ஆக. 2 ஆம் தேதியிலிருந்தும், மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் - கோவை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக.3 ஆம் தேதியிலிருந்தும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.