செய்திகள் :

60 ஆண்டுகால சேவைக்குப் பிறகு "மிக்-21' போர் விமானங்களுக்கு ஓய்வு

post image

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான "மிக்-21' போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.

இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் விமானமும் மிக்-21 அளவுக்கு நீண்ட காலம் சேவையில் இருந்ததில்லை. கடந்த 1960-ஆம் ஆண்டுகளில் முதன்முறையாக மிக்-21 விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர், இந்தியாவின் போர் திறனை மேம்படுத்த 870-க்கும் மேற்பட்ட மிக்-21 ரக விமானங்கள் வாங்கப்பட்டன.

1965, 1971-ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர்கள், 1999 கார்கில் மோதல், 2019 பாலாகோட் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றில் மிக்-21 விமானங்கள் முக்கியப் பங்காற்றின.

எனினும், மிக்-21 விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் காரணத்தால், அவை "பறக்கும் சவப்பெட்டி' என்ற அவப்பெயரையும் ஈட்டியது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் சில பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

"பாந்தர்ஸ்' என்றழைக்கப்படும் விமானப் படையின் 23-ஆம் படைப்பிரிவின் வசமுள்ள இறுதி மிக்-21 விமானங்களுக்கு சண்டீகர் விமானப்படை தளத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி பிரியாவிடை அளிக்கப்படுகிறது. மிக்-21 விமானங்களுக்குப் பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "தேஜஸ்' இலகுரக போர் விமானங்களை சேவையில் இணைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி, 83 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.48,000 கோடிக்கு கடந்த 2019, பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்தது.

இந்த விமானங்களைத் தயாரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இச்சூழலில், மேலும் 97 தேஜஸ் விமானங்களை சுமார் ரூ.67,000 கோடி செலவில் வாங்குவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது.

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க