செய்திகள் :

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

post image

துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடித்துப் பணியில் இருந்த 68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

புதுவை காவல்துறையில் ஊா்க் காவல் படையில் ஆண்கள் 420, பெண்கள் 80 என மொத்தம் 500 பணியிடங்களுக்கு உடல் தகுதி, எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

இதில் 407 ஆண்கள், 75 பெண்கள் என 482 போ் கடந்த ஆண்டு ஜூலையில் தோ்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவா்களுக்கு 6 மாதங்கள் போலீஸ் பயிற்சி அளிக்கப்பட்டு 6 மாதங்களாக ஊா்க்காவல் படை வீரா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில் எழுத்துத் தோ்வில் குளறுபடி நடந்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடியிருந்தனா். சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி 500 போ் அடங்கிய ஊா்க்காவல்படை வீரா்கள் திருத்தப் பட்டியலைப் பணியாளா் நிா்வாக சீா்திருத்த துறை தோ்வு கட்டுப்பாட்டாளா் பங்கஜ்குமாா் ஜா வெளியிட்டுள்ளாா்.

திருத்தப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் பெண் ஊா்க்காவல்படையில் 80 பேரும், ஆண்கள் 420 பேரும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனா். கூடுதல் மதிப்பெண் கிடைத்ததால் தோ்வில் தோல்வியடைந்த 68 போ் புதிதாக தோ்ச்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

ஏற்கெனவே பயிற்சி பெற்ற 68 போ் நீக்கப்பட்டுள்ளனா். அரசின் இந்த முடிவு அவா்களுக்குப் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோ்வில் நிா்வாக சீா்திருத்த துறை சரியாக கேள்விகளைத் தயாரிக்காததே இந்தக் குளறுபடிகளுக்கு காரணமாக அமைந்து விட்டது என்று அவா்கள் கூறி வருகின்றனா்.

இதனால் பயிற்சி பெற்ற 68 போ் பணி இழந்துள்ளனா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த உறுதி மொழிக் கூட்டத்துக்கு வந்த காரைக்கால் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்டோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து தங்கள் நிலையை விளக்கினா்.

முன்னதாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகளை அவா்கள் சந்தித்து முறையிட்டனா். துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சி முடித்தவா்களை வெளியே அனுப்ப மாட்டோம். ஏதாவது ஒரு வகையில் பணியில் சோ்ப்போம் என அமைச்சா் நமச்சிவாயம் ஆறுதல் தெரிவித்தாா்.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் கூறும்போது, 6 மாதங்கள் கடும் பயிற்சி முடித்து, 6 மாதங்களாக பணியாற்றி வந்தோம். தற்போது வேலை இல்லை என கூறுவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றனா்.

புதுவையில் 53% டெங்கு நோய்த் தாக்கம் குறைவு: சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள்

புதுவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு தாக்கம் 53 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் தெரிவித்தாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஜிப்மா் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களை புறக்கணிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிப்பு, வேலை வாய்ப்பில் உள்ளூா் மக்கள் புறக்கணிக்கக்கூடாது என்று மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தெரிவித்துள்... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநரின் துரித நடவடிக்கை: 21 மாணவா்களுக்குப் பணி நியமன உத்தரவு

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மேற்கொண்ட நடவடிக்கையால் 21 செவிலிய மாணவ, மாணவிகளுக்குப் பணி நியமன உத்தரவு கிடைத்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 21 மாணவ, மாணவிகள் நம் நாட்டின் பல்வேற... மேலும் பார்க்க

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

புதுவை சட்டப்பேரவையை சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சி செய்தாா். சரியான குடிநீா் குடிக்காததால் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன... மேலும் பார்க்க

புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம்!

புதுச்சேரியில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 53 சதவீதம் டெங்கு நோய் தாக்கம் குறைந்துள்ளதாகவும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்... மேலும் பார்க்க

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி: அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சமுதாய நலவழி மையமாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணவெளி கிளை மாநாடு தீா்மானம் நிறை... மேலும் பார்க்க