இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
துணைநிலை ஆளுநரின் துரித நடவடிக்கை: 21 மாணவா்களுக்குப் பணி நியமன உத்தரவு
புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மேற்கொண்ட நடவடிக்கையால் 21 செவிலிய மாணவ, மாணவிகளுக்குப் பணி நியமன உத்தரவு கிடைத்தது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 21 மாணவ, மாணவிகள் நம் நாட்டின் பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியா் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
அவா்கள் சான்றிதழ் பெறுவதிலும், சரி பாா்ப்பதிலும் ஏற்பட்ட குளறுபடி காரணமாக செவிலியா் நியமன உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவா்கள் பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனா்.
அதன் தொடா்ச்சியாக துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனின் துரித நடவடிக்கையால் மாணவ, மாணவிகளுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவா் ராமலிங்கம் முன்னிலையில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனைச் சந்தித்து அந்த மாணவா்கள் வாழ்த்துப் பெற்றனா்.