Vinsu Rachel Sam: 'தண்டகாரண்யம்' பட நடிகை வின்சு ரச்சேல் சாம் க்ளிக்ஸ்!|Photo Al...
7 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
கோவையில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 7 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.
கோவை, குனியமுத்தூா் கரும்புகடை பகுதியில் ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கரும்புக்கடை பாத்திமா நகா் முதல் வீதியில் வசிக்கும் பஷீா் (49) என்பவரின் வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இதில், 7 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டயறிப்பட்டது.
இதையடுத்து, பஷீரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.