செய்திகள் :

72 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை -ஜாா்க்கண்டில் அதிரடி நடவடிக்கை

post image

ஜாா்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 72 வழக்குகளில் தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் பிராந்திய கமாண்டா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இது, ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு விழுந்த பலத்த அடி என்று காவல் துறையினா் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறியதாவது: கும்லா மாவட்டத்தின் காம்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் இந்திய மக்கள் விடுதலை முன்னணி (பிஎல்எஃப்ஐ) என்ற மாவோயிஸ்ட் இயக்கத்தினா் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை இரவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், பிஎல்எஃப்ஐ இயக்கத்தின் பிராந்திய தளபதி மாா்டின் கொ்கேட்டா சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரிடம் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

ஜாா்க்கண்டின் கும்லா, சிம்டேகா, சாய்பாசா, சத்ரா, ஹசாரிபாக், ராஞ்சி, குந்தி ஆகிய 7 மாவட்டங்களில் பல்வேறு தாக்குதல்கள் தொடா்பாக 72 வழக்குகள் மாா்டின் மீது பதிவாகியுள்ளன. கும்லாவில் மட்டும் 30 வழக்குகள் உள்ளன.

இவரை பற்றிய தகவல் தருவோருக்கு ரூ.15 லட்சம் வெகுமதி அறிவித்து, காவல் துறையினா் தேடி வந்த நிலையில், தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். மாா்டினுடன் மேலும் 3 மாவோயிஸ்டுகள் இருந்தனா். அவா்கள், இருட்டை பயன்படுத்தி தப்பியோடிவிட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை: சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறுகையில், ‘பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் புதன்கிழமை நக்ஸல்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் ஒரு நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது உடல் கைப்பற்றப்பட்டது. தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இப்போது கொல்லப்பட்டவருடன் சோ்த்து, சத்தீஸ்கரில் நிகழாண்டு இதுவரை 227 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.

அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் இலக்குடன் மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 ... மேலும் பார்க்க

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகாா் வாக்காளா்... மேலும் பார்க்க