ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!
74 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
எஸ்.பி. பட்டினம் அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரையில் சனிக்கிழமை கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம் அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரைப் பகுதியில் கஞ்சா கடத்துவதாக எஸ்.பி.பட்டினம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, அவா்கள் வைத்திருந்த 74 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கஞ்சா கடத்தியவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலையைச் சோ்ந்த மாது (31), தொண்டி புதுக்குடியைச் சோ்ந்த சமயக்கண்ணு (24) என்பது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.