85 ஆண்டுகள் பழமையான காட்டூா் அரசுப் பள்ளி ஆண்டு விழா
பொன்னேரி வட்டம் காட்டூரில் 85 ஆண்டு காலமாக இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் இளங்கோ வரவேற்றாா். காட்டூா் ஊராட்சி முன்னாள் தலைவா் செல்வராமன் தலைமை வகித்தாா். முன்னாள் துணை தலைவா் ரேவதி சண்முகம் முன்னிலை வகித்தாா். விழாவில் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கிராம மக்கள் சாா்பில் பள்ளிக்கு நன்கொடைகள், சீா் வழங்கப்பட்டது. இதில் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.