செய்திகள் :

Ajith Kumar: "நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை" - கார் ரேஸ் வெற்றி குறித்து நன்றி தெரிவித்த அஜித்

post image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார் கடந்த சில மாதங்களாக கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவர், `அஜித் குமார் ரேஸிங்' என்ற பெயரில் கார் ரேஸ் அணி வைத்திருக்கிறார். கடந்த ஜனவரியில் துபாயில் நடைபெற்ற 24H ரேஸில் அஜித் குமார் ரேஸிங் அணி, 922 போர்ஷே பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மாதம் இத்தாலியில் நடந்த 12H முகெல்லோ சாம்பியன்ஷிப்பில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாம் பிடித்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 20), பெல்ஜியம் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் (Circuit of Spa-Francorchamps) கார் ரேஸில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

கார் ரேஸில் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் தொடர்ச்சியாகப் பெருமை சேர்த்துவரும் அஜித் குமார் மற்றும் அவரது ரேஸிங் அணிக்கு பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில், "ரேஸிங் முதல் வெற்றிவரை உங்களின் ஆதரவின்றி இதைச் செய்திருக்க முடியாது. ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் ரேஸில் இரண்டாம். இதைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று அஜித் குமார் நன்றி தெரிவித்திருக்கிறார். இதனை, அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

'அதிகாலை 2:30 மணிக்கு எழுந்து வேலை செய்துவிட்டு காலை 7 மணிக்கு தூங்குவேன்' - ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனியார் ஊடகம் ஒன்றிருக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் சில விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் மும்பையின் கடுமையானப் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பது... மேலும் பார்க்க

Dhanush: ``தனுஷ் - மாரி செல்வராஜ் படத்துக்கு முன் இன்னொரு தனுஷ் படம் இருக்கு.." - ஐசரி.கே.கணேஷ்

தனுஷ் தற்போது பெரிய லிஸ்ட் கொண்ட படங்களின் லைன்-அப்பை தனது கையில் வைத்திருக்கிறார். இந்த லிஸ்டில் முதலாவதாக சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'குபேரா' திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகள... மேலும் பார்க்க

GT vs KKR: ``முன்னேறிச் செல்லுங்கள்!'' - சாய் சுதர்சனை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 39 -வது போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணி நன்கு விளையாடி 198 ரன்கள... மேலும் பார்க்க

Mandaadi: பாய்மரப் போட்டி; வித்தியாசமான களம்; ராமநாதபுரத்தில் தொடங்கும் சூரியின் 'மண்டாடி'

ரஜினி, கமல் போல டாப் ஹீரோக்களின் வழியைப் பின்பற்றுகிறார் சூரி. ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து அகல கால் வைக்காமல், ஒரு படத்தில் நடித்து முடித்த பின்னரே, அடுத்த படத்திற்கு வருகிறார் அவர். பிரசாந்த் ... மேலும் பார்க்க