செய்திகள் :

Allu Arjun Stampede case: "அல்லு அர்ஜுன் மீதான வழக்கை வாபஸ் வாங்க தயார்" - உயிரிழந்த பெண்ணின் கணவர்

post image
'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கத் தொடரப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் டிச.4-ல் குவிந்தனர். இதனால் அங்குப் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் அந்தத் திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால் ரசிகர்கள் கூட்டம் இன்னும் ஆக்ரோஷமானது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்தார். அவரது மகன்(9) தற்போது கவலைக்கிடமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

உயிரிழந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் பணமும், சிகிச்சைப் பெற்று வரும் 9 வயது சிறுவரின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அல்லு அர்ஜுன்

இந்தச் சம்பவத்தில் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது குறித்து முறையாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்காத திரையரங்க உரிமையாளர்கள் மீதும், முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்தாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. மேலும், ரேவதி (39) உயிரிழந்தது தொடர்பாகவும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, இன்று காலை காவல்துறையினர் நடிகர் அல்லு அர்ஜுனை, அவரது வீட்டிலிருந்து கைது செய்து ஹைதராபாத், சிக்கடப்பள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். இதுதொடர்பாக வீட்டிலிருந்தபடி அவரை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காணொலி வெளியாகி இருந்தது.

இந்த வழக்கு விசாரனையில் தற்போது, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

மற்றொரு புறம், திரையரங்கத்தினர் முன்கூட்டியே விஐபிக்கள், பிரபலங்கள் திரையரங்கிற்கு வருவதாக காவல்துறையிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறுகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பாஸ்கர்

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் ரசிகர்கள் கூட்ட நெரிசலால் மனைவியை (ரேவதி) இழந்த பாஸ்கர், நடிகர் அல்லு அர்ஜுன் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகப் பரபரப்பாகப் பேட்டியளித்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் பாஸ்கர், "என் மகன் விருப்பப்பட்டதால்தான் 'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க குடும்பத்துடன் சென்றோம். அது எங்கள் தவறுதான். ரசிகர்களின் கூட்ட நெரிசலால் என் மனைவி உயிரிழந்தார். என் மகன் சிகிச்சைப் பெற்று வருகிறான். எதிர்பாராமல் நடந்த இந்த அசாம்பாவிதத்திற்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இந்த வழக்கில் அல்லு அர்ஜுனை கைது செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காவல்துறை என்னிடம் இதுபற்றித் தெரிவிக்கவில்லை. நான் அல்லு அர்ஜுன் மீதான வழக்கை வாபஸ் வாங்கத் தயாராக இருக்கிறேன்." என்று பரபரப்பாகப் பேட்டியளித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Game Changer: படத்தில் இருக்கும் ஐந்து பாடல்களின் பட்ஜெட் 75 கோடி! - `ஷாக்'கான ராம் சரண்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `கேம் சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இத்திரைப்படம் தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50-வது படம். பிரமாண்டமாக ... மேலும் பார்க்க

Game Changer: `` இந்திய அரசியலின் உண்மையான கேம் சேஞ்சர் பவன் கல்யாண்தான்!'' - ராம் சரண் ஷேரிங்ஸ்

ஷங்கரின் `கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் பிரமாண்டமான ப்ரோமோஷன் நிகழ்வு ராஜமுந்திரியில் நடைபெற்றது.இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்துக் கொண்டார். துணை முதல்வராக பதவியேற்றப் பிறகு அ... மேலும் பார்க்க

Game Changer: "இது சங்கராந்தி அல்ல; ராம் சரணின் 'ராம் நவமி'" - இயக்குநர் ஷங்கர் புகழாரம்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.நேற்று (ஜன.2) இப்படத்தின் ட்ரெய்லர் வெள... மேலும் பார்க்க

Game Changer: "ஷங்கர் தமிழ் இயக்குநர் அல்ல, தெலுங்கு இயக்குநர்; ஏன்னா..." - ராஜமெளலி

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, கியாரா அத்வானி அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேம் ஜேஞ்சர்'.அரசியல் திரில்லர் திரைப்படமான இது வரும் ஜனவரி 10ம் தேதி த... மேலும் பார்க்க

``சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றவர்கள் பொறுப்பற்று செயல்படவில்லை" - அல்லு அர்ஜுனை சாடும் தயாரிப்பாளர்

தெலுங்கு சினிமாவை உலகளவில் பிரபலப் படுத்திய நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். சமீபத்தில் அவருடைய புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு திரையிடலில் கூட்ட நெரிசலில் ரசிகை ஒருவர் மரணித்த விவகாரமும் அதைத் ... மேலும் பார்க்க

நடிகைக்கு பாலியல் தொல்லை: `புகைப்படத்தைக் காண்பித்து மிரட்டுகிறார்’ - கன்னட சின்னத்திரை நடிகர் கைது

கன்னட தொடரான முத்துலட்சுமி தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமாகி பிஸியாக நடித்து வருபவர் நடிகர் சரித் பாலப்பா. இவர் மீது தொலைக்காட்சித் தொடர் நடிகை ஒருவர் ராஜராஜேஸ்வரி நகர் காவல்துறையில் புகார் அளித்த... மேலும் பார்க்க