டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்... அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!
Ambedkar: ``எந்த இந்தியரும் சகித்துக் கொள்ளமாட்டார்.." - அமித் ஷாவுக்கு கமல்ஹாசன் பதில்!
அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகி விட்டது என மத்தியில் ஆளும் பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில், நாடுமுழுவதும் இந்த விவகாரம் பேசுப் பொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழக்கத்தைன் தலைவர் விஜய், `` எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்." எனக் காட்டமாக தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்,``நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார். அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ளமாட்டார்.
நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75-ம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.