செய்திகள் :

AR Rahman: Shape of You x ஊர்வசி ஊர்வசி... ரஹ்மான் பாடலால் Vibe-ஆன Ed Sheeran!

post image

சென்னையில் நடந்த பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாததாக மாறியிருக்கிறது. காரணம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

எட் ஷீரன் இசை நிகழ்ச்சியில் ரஹ்மான் இணைந்தது ரசிகர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. சர்வதேச அளவில் ஹிட்டான எட் ஷீரனி Shape of You ரஹ்மானின் ஊர்வசி ஊர்வசி பாடல்கள் இணைந்து உருவாக்கப்பட்ட மேஷ்அப்பை இருவரும் பாடினர்.

ரஹ்மான் அவரது மேஜிக்கல் குரலில் பாட, ரசிகர்களுடன் சேர்ந்து தானும் வைப் ஆனார் எட் ஷீரன்.

ரஹ்மானுடன் இணைந்து பாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "என்ன ஒரு கௌரவம் @ஏ.ஆர்.ரஹ்மான்" என எழுதியிருந்தார்.

ரஹ்மான் மற்றும் ஷீரனின் வீடியோ இணையத்தில் வைரலானது. என்னதான் சென்னையில் அதிகமாக சர்வதேச இசை நிகழ்ச்சிகள் இல்லை என்றாலும் இதுபோன்ற ஒரு கொலாபரேஷனை காண சென்னை கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் ரியாக்‌ஷன்.

இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்திருந்தார் எட் ஷீரன். ரஹ்மானை எட் ஷீரன் புகைப்படம் எடுப்பதுபோன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் ரஹ்மான்.

Grammy Awards: `70 வயதில் சாதனை' கிராமிய விருதை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி

உலகெங்குமுள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 67வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த வி... மேலும் பார்க்க

தனியிசை: "கேபர், அசல், பால் டப்பா... யாராவது 'சூப்பர் ஸ்டார்' ஆக வேண்டும்" - எழுத்தாளர் சீனிவாசன்

கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட இப்போது நாம் அதிகமாக தனியிசைக்கு (Independent Music) செவிகொடுக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?தனியிசைக் காலம்:யூடியூப் தளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகும் தனி... மேலும் பார்க்க

பவதாரிணி: "கவனமெல்லாம் இசையிலிருந்ததால், குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுட்டேன்" - இளையராஜா உருக்கம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு இதே நாளில் (ஜனவரி 25, 2024) மறைந்தார். இந்நிலையில், தனது மகளின் நினைவு நாளான இன்று இளையராஜா எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதி... மேலும் பார்க்க

`உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்… உனக்குள்தானே நான் இருந்தேன்' - என்றும் மறவா ஜெயச்சந்திரன் ஹிட்ஸ்

`சாகா வரம் போல் சோகம் உண்டோ' என்ற வாக்கியம் கலைஞர்களிடத்தில் மட்டும், `சாகா வரம் போல் மகிழ்வேதும் உண்டோ' என மாறிவிடுகிறது.கலைஞர்கள் மட்டும்தான் தாங்கள் மறைந்த பின்பும் தங்களின் கலைகளின் ஊடாக காலம் உள்... மேலும் பார்க்க

AR Rahman : ``ரஹ்மான் நட்பாகப் பழகக்கூடியவர் அல்ல..." - பாடகர் சோனு நிகம் ஓப்பன் டாக்

தமிழ் சினிமாவிலிருந்து இந்தி சினிமா அங்கிருந்து ஹாலிவுட் என இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலமானவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "கலையும்,இசையும் இல்லையென்றால் இந்தியர்களுக்கு வாழ்க்கையே இல்லை"- இளையராஜா

சென்னை ஐஐடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இளையராஜா பேசியிருக்கிறார்.சென்னை ஐஐடியில் நேற்று ( ஜனவரி 9) கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் இளையராஜாவும் ... மேலும் பார்க்க