Atul Subhash: மர்மமான முறையில் காணாமல் போன கோப்புகள்; சாட்சிகள் அழிக்கப்படுகிறதா?
கடந்த திங்கட்கிழமை உத்தரபிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் தன் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி 24 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
34 வயதான இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்ட கடிதத்தில் தன்னை மிரட்டி தன்னுடைய மனைவி மற்றும் அவரின் குடும்பம் பணம் பறிக்க முயன்றதாகவும் அதற்காக தன்னுடைய குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதுல் சுபாஷ் அவருடைய மனைவியைப் பிரிந்த பிறகு அவருடைய மனைவியின் குடும்பம் மாதந்தோறும் 2 லட்ச ரூபாய்யை பராமரிப்பு தொகையாக கேட்டிருக்கிறார்கள். சமீபத்தில் குடும்ப நல நீதிமன்றம் அதுல் சுபாஷுக்கு எதிராக தீர்ப்பளித்திருக்கிறது. அதனால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்ல இதுபோன்ற வழக்குகளில் ஆண்களுக்கு எதிராக பெண்கள் சார்பாக இருப்பதாகக் கூறி குற்றம் சாட்டி நீதி அமைப்பை விமர்சித்திருந்தார் அதுல் சுபாஷ்.
அவர் இறப்பதற்கு முன்பு சில கோப்புகளை பதிவேற்றிய கூகிள் டிரைவ் லிங்கை பகிர்ந்திருந்தார். அந்த கூகிள் டிரைவில் இருந்த கோப்புகள் தற்போது மர்மான முறையில் காணாமல் போயிருக்கின்றன. அந்த கூகிள் டிரைவில் 24 பக்க தற்கொலை கடிதமும் நீதி அமைப்பை விமர்சித்திருந்த `மை லார்ட்' என்ற கடிதமும் இருந்திருக்கிறது. அது தற்போது காணாமல் போயிருக்கிறது. அந்த டிரைவ் லிங்கில் தற்போது `Death knows no fear' என்ற கவிதையும், ஜனாதிபதிக்கு அனுபப்பட்ட கடிததமும் இருக்கிறது. இந்த கோப்புகள் அதுல் சுபாஷின் தற்கொலைக்கு முன்பிருந்தே அந்த டிரைவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை மூடி மறைபதற்காகவும், சாட்சிகளை அழிப்பதற்கு முயற்சி நடந்துள்ளதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். சட்ட அமைப்பு அதிகாரிகள் கூகிளிடம் கேட்டு தற்கொலைக்கு முன் பகிர்ந்த கோப்புகளை நீக்கியிருக்கலாம் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விஷயத்திற்கு காவல் துறை இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...