ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்: கே.பி.ராமலிங்கம்
BB Tamil 8: `ஏன்னா நீ என் அம்மா!' - மகனின் வார்த்தைகளால் நெகிழ்ந்த மஞ்சரி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள். அந்த வகையில் இன்று காலை வெளியான முதல் புரோமோவில் தீபக்கின் மனைவி மற்றும் மகன் வந்திருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மஞ்ரியின் அம்மா, மகன் என அவரின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர்.
`` 'அம்மாவ டெவில் வேஷத்துல பார்க்கும்போது பயந்திங்களா? என மஞ்சரி கேட்க அவரின் மகன் 'பயப்படல ஏன்னா நீ என்னோட அம்மா' என்று மகன் கூற மஞ்சரி நெகிழ்கிறார். தொடர்ந்து அவரின் அம்மாவிடம் பேசிய மஞ்சரி, ' வெளியில இருக்குறவங்க என்னைய பாஸிட்டிவாவோ அல்லது நெகட்டிவாவோ நினைக்குறது எனக்கு பிரச்னை இல்ல. ஆனா உங்க எல்லோருக்கும் மஞ்சரி எப்படி இருக்கா அப்படிங்குறதுதான் முக்கியம்" என்று சொல்கிறார்.