குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது
BB Tamil 8: மீண்டும் டபுள் எவிக்ஷன்; வெளியேறப்போகும் இருவர்!
கடைசிக்கட்ட பரபரப்புடன் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மேலும் ஆறு பேர் சேர மொத்தப் போட்டியாளர்களின் எண்ணிக்கை 24 ஆனது.
அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ரஞ்சித், ரவீந்தர், அர்னவ், சுனிதா, வர்ஷினி வெங்கட், ஜெஃப்ரி, தர்ஷிகா, அன்ஷிதா, சத்யா, ரியா, தர்ஷா குப்தா, சிவகுமார், சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகிய 14 பேர் வெளியேறி விட்டனர். முத்துக்குமரன், மஞ்சரி உள்ளிட்ட 10 பேர் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் விஜய் சேதுபதி கலந்துகொள்ளும் வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கி, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.வாரம் முழுக்க அந்த வீட்டுக்குள் நடந்தவைகளை முதலில் விசாரிக்கத் தொடங்கினார் விஜய் சேதுபதி.
தற்போது எவிக்ஷனுக்கான நேரம் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
நமக்குக் கிடைத்த தகவலின் படி இந்த வாரமும் டபுள் எவிக்ஷனுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரே ஒரு வாரம்தான் இருக்கிற சூழலில் பத்து பேர் உள்ளே இருப்பதாலேயே டபுள் எவிக்ஷன் என்கிறார்கள்.
யார் அந்த இருவர் என்கிற ஆர்வம் பிக்பாஸ் ரசிகர்களிடம் எகிறி வருகின்ற சூழலில் அடுத்த சில மணி நேரங்களில் அதற்கான விடை தெரிய வரும்.