குடும்பமே முக்கியம்..! இலங்கை தொடரிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
BB Tamil 8: "திரும்ப அந்த குழிக்குள்ள விழ விரும்பல..." - ஜாக்குலின் பற்றி சௌந்தர்யா பளீர்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 85 வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் ஜெப்ஃரியும், அன்ஷிதாவும் வெளியேறி மீதம் 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வார எவிக்ஷனிற்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ரயான், ஜாக்குலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஜாக்குலினை சௌந்தர்யா நாமினேட் செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரோமவில் சௌந்தர்யா இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். "ஷோவுக்கு இவ்வளவு நாள் காத்திருந்து வரேன் அப்டினா நான் எனக்காகத்தான் விளையாட வேண்டும். புனிதமான ப்ரெண்ட்ஷிப்பை காட்ட நான் இங்க வரல. ஜாக்குலினோட ப்ரெண்ட்ஷிப் எனக்குப் பாதிப்பை உண்டாக்குது. அதனால திரும்ப அந்த குழிக்குள்ள நான் விழ விரும்பல. இவுங்களைப் பொறுத்தவரைக்கும் ப்ரெண்ட்டுக்காக நிக்கணும். ஆனா நான் அப்படி பண்ணுனா என்னோட விளையாட்டை நான் இழந்திருவேன்" என்று விஷாலிடம் கூறுகிறார் சௌந்தர்யா.