மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
Book Fair: "எழுத்து ஒரு தவம்; அதை நேசித்து வாசித்தால்..." - ஷோபா சக்தியின் பரிந்துரைகள் என்னென்ன?
சென்னையில் நடைபெற்று வரும் 48வது புத்தகக் கண்காட்சிக்கு வரும் எழுத்தாளுமைகளைச் சந்தித்து அவர்களின் பரிந்துரைகள், கடந்த ஆண்டு படித்த முக்கிய படைப்புகள் என்று தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறோம். அந்த வகையில் பல எழுத்தாளர்கள் பரிந்துரைத்த புத்தகம் 'ஷோபா சக்தியின் சிறுகதை தொகுப்பு'. எழுத்தாளர் ஷோபா சக்தியைச் சந்திக்கலாம் என்று தேடிச்சென்ற போது, கருப்புப் பிரதிகள் பதிப்பகம் கடையில் வாசகர்களுடன் உரையாடலில் பிஸியாக இருந்தார். அவரின் சிறுகதை தொகுப்புக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு இவரின் பரிந்துரையைக் கேட்டோம்.
ஷெஹான் கருணாதிலகவின் 'மாலி அல்மேதாவின் ஏழு நிலவுகள்' (தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ் ), ஜார்ஜ் ஜோசப் எழுதிய 'பெருநெஞ்சன்', செந்தில் ஜெகன்நாதன் எழுதிய 'அனாகத நாதம்', கேசநந்தன் அகரன் எழுதிய 'துரோகன்', சிவா லெனின் எழுதிய 'மலாயா கணபதி', சரண்குமார் லிம்பாலேயின் 'கும்பல்' எனத் தாம் விரும்பி வாங்கிய நூல்களையே பரிந்துரையாகக் கொடுத்தார்.
மேலும், "அச்சு, காட்சி எதுவானாலும் சரி முதல் சில நிமிடங்களில் அந்தப் படைப்பின் மீது ஈர்ப்பு வரவேண்டும். அப்படி வரவில்லையென்றால் வாசகர்கள் சலிப்படைந்து தொடர்ந்து படிப்பதை விட்டு விடுவார்கள். இப்போதெல்லாம் நிறைய இளம் எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுகிறார்கள். எழுத்து ஒரு தவம். நேசித்து வாசித்தால் பலன் கிடைக்கும்" என்றார்.
Vikatan Audio Books
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...