வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
Career: "டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா?" - இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை; முழு விவரம்
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் துறைகளில் ஜூனியர் இன்ஜினியர் பணி.
மொத்த காலி பணியிடங்கள்: சிவில் பிரிவில் 7 (தென் மண்டலத்தில் இரண்டு காலிப்பணியிடங்கள்); எலெக்ட்ரிக்கல் பிரிவில் 4 (தென் மண்டலத்தில் ஒரு காலிப்பணியிடம்).
குறிப்பு: தென் மண்டலம் என்றால் சென்னை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம்.
வயது வரம்பு: 20 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ஆரம்ப சம்பளம் ரூ.33,900.
கல்வித் தகுதி:
சிவில் பிரிவு: சிவில் இன்ஜினியரிங்கில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு அல்லது இன்ஜினியரிங் பட்டப்படிப்பு.
எலெக்ட்ரிக்கல் பிரிவு: எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு அல்லது இன்ஜினியரிங் பட்டப்படிப்பு.
அனுபவம்:
டிப்ளமோ படித்தவர்களுக்குக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். பட்டப்படிப்பு படித்தவர்களுக்குக் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் வேண்டும்.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வு (எந்த மாநில வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலத்தில் புலமை வேண்டும்).
தேர்வு எங்கு நடக்கும்?
தமிழ்நாட்டில் சென்னை.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஜனவரி 20, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.opportunities.rbi.org.in
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Vikatan Audio Books
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...