Chahal: "தீர்ப்பு வாசிக்கும்போது அழுதுவிட்டேன்" - சஹால் உடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த தனஶ்ரீ
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்குக் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் சஹால் திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே சஹால் மற்றும் தனஶ்ரீ இருவரும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற மனுத் தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம், விவாகரத்துக்கான ஒப்புதல் விதிமுறைகளுடன் சஹல், தனஶ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சாஹலும் இதற்கு ஒத்துக்கொண்டார்.
இருவருக்கும் மும்பை குடும்ப நீதிமன்றம் விவாகரத்தும் வழங்கியது. இந்நிலையில் தனஸ்ரீ வர்மா விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக 'Humans of Bombay' என்ற யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்திருக்கும் அவர், "விவாகரத்து தீர்ப்பு வழங்கப்பட்டபோது நான் உணர்ச்சிவசப்பட்டேன். தீர்ப்பு இதுதான் என முன்பே தெரிந்திருந்தும் தீர்ப்பு வாசிக்கும் போது எல்லோர் முன்பும் அழ ஆரம்பித்தேன்.
ஆனால் சஹால் முதல் ஆளாக அங்கிருந்து வெளியேறினார். விவாகரத்து என்பது கொண்டாடும் ஒரு விஷயம் அல்ல. அது மிகவும் சோகமானது மற்றும் உணர்ச்சிப்பூர்வமானது" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...