மக்கள் நலத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
Chandrachud: "என் தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படட்டும்" - தலைமை நீதிபதியாக சந்திரசூட்டின் இறுதி உரை
இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 09-ம் தேதி பதவியேற்றார். அவரின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான பதவிக்காலம் 2 ஆண்டுகள் பணி நிறைவு வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், வேலை நாளான இன்று (நவம்பர் 8) அவரின் பதவிக்கான கடைசி நாள். அதனால், மீதமிருந்த வழக்குகளை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், விசாரணை முடிந்து நீதிபதி நாற்காலியில் அமர்ந்து இறுதியாக உரையாற்றினார்.
அப்போது, "நாளையிலிருந்து என்னால் நீதியை வழங்க முடியாது. ஆனால், நான் செய்த பணியில் திருப்தி அடைகிறேன். நேற்று மாலை எனது உதவியாளர், இறுதி நாளின் உபசரிப்புகளை எத்தனை மணிக்குத் தொடங்க வேண்டும் எனக் கேட்டபோது, 'இன்றைய தேதிக்காகப் பட்டியலிடப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படவிருக்கிறது. அதனால், அந்த விசாரணைகளை முடித்ததும்... மதியம் 2 மணிக்கு' எனக் கூறினேன். வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு யாராவது இங்கு வருவார்களா, அவ்வளவு நேரம் இருப்பார்களா என யோசித்தேன். ஆனால், நீங்கள் வந்து இருக்கிறீர்கள். இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
நீதிபதிகள் ஒரு யாத்திரிகர்களைப் போல. ஒவ்வொரு நாளும் சேவை செய்ய அர்ப்பணிப்புடன் நீதிமன்றத்திற்கு வருகிறார்கள். தன் திறமையால், வழக்குகள் மூலம் நீதியை நிலைநாட்டி, நீதிமன்றத்தை அலங்கரித்தவர்களுக்கும், அநீதிக்கு எதிராகக் களமாடிய சிறந்த நீதிபதிகளுக்கும் என் பாராட்டுகள். மேலும் திறமையான நீதிபதியிடம் என் இருக்கையை விட்டுச் செல்கிறேன் என்பதிலும் மகிழ்ச்சி. நீதிமன்றத்தில் நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக என்னை மன்னியுங்கள். "மிச்சமி துக்கடம்" (ஜெயின் சொற்றொடரை மேற்கோள்காட்டி) என் தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படட்டும்" என அவரின் உரையை முடித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs