Chandrachud: ``நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கெதிரான முடிவைக் குறிக்காது'' - சந்திரசூட்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தேர்தல் பத்திரம் திட்டம், ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்புகள், கருத்துகள் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கிறார். இவர், நவம்பர் 10-ம் தேதியோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிலிருந்து ஓய்வுபெறுகிறார். இந்த நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் என்பது எப்போதும் அரசுக்கெதிரான முடிவைக் குறிக்காது எனத் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய சந்திரசூட், ``தேர்தல் பத்திரம் திட்டம் வழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்பை வழங்கும்போது நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். ஒருவேளை, அரசுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கினால் நீங்கள் சுதந்திரமாக இல்லை. இதுவொன்றும், சுதந்திரம் பற்றிய என்னுடைய வரையறை அல்ல. இப்போது கூட, நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசிடமிருந்து சுதந்திரமாக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால், அதுமட்டுமே நீதித்துறையின் சுதந்திரம் அல்ல. நம்முடைய சமூக மாறிவிட்டது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் வருகையில். சில குழுக்கள், இந்த டிஜிட்டல் ஊடகங்கள் மூலம், தங்களுக்குச் சாதமான தீர்ப்பை வழங்க நீதிமன்றங்களுக்கு அழுத்தம் தருகின்றன.
அவ்வாறு தீர்ப்பளித்தால், நீதித்துறை சுதந்திரமாக இருக்கிறது என இந்தக் குழுக்கள் கூறுகின்றன. அப்படித் தீர்ப்பளிக்கவில்லையென்றால் சுதந்திரமாக இல்லை என்பார்கள். அதுதான் என்னுடைய ஆட்சேபனை. எனவே, நீதித்துறை சுதந்திரமாக இருக்கவேண்டுமென்றால், நீதிபதிகளுக்கு தங்களின் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். அதேசமயம், அந்த மனசாட்சி சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுவதாக இருக்க வேண்டும்.
தீர்ப்பு யாருக்குச் சாதகமாக வந்தாலும், நீதியின் சமநிலை எங்கு உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து தீர்மானிக்கும் சுதந்திரத்தை நீதிபதிகளுக்கு மக்கள் வழங்க வேண்டும். அரசுக்கெதிராக முடிவுகள் சொல்லும் வழக்குகளில் நாங்கள் அரசுக்கெதிராக முடிவெடுத்தோம். அதேபோல், ஒரு வழக்கில் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனச் சட்டம் கூறினால், அதில் சட்டப்படியே முடிவெடுக்க வேண்டும். நீதித்துறையின் இருப்புக்கு முக்கியமான இந்தச் செய்தி அனைத்து தரப்புக்கும் செல்ல வேண்டும்." என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88