Chennai Rain: இரவு முழுவதும் இடி, மின்னல்; "அடுத்த மூன்று நாட்களுக்கு" - பிரதீப் ஜான் அப்டேட்!
நேற்று இரவு வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி, சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆர்வலர் பிரதிப் ஜான், இன்று சென்னை மேக மூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
⚡ Damal Dummel Outlook for KTCC (Chennai) tonight !!!
— Tamil Nadu Weatherman (@praddy06) September 15, 2025
---------------
Storms from Vellore are marching slowly towards KTCC (Chennai) and are likely to reach the city’s western boundary within the next 2 hours. Tomorrow is set to be an awesome weather day for Chennai with cloudy… pic.twitter.com/H7pBVzBB9n
அடுத்த 3 நாட்கள் சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், செப்டம்பர் மாத இரண்டாம் பாதியில் அதிகமாக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்