ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - சத்தீஸ்கரில் என்ன நடந்தது?
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அபுஜ்மத்தில் ஒரு மூத்த மாவோயிஸ்ட் தலைவர் மறைந்திருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. அதன் அடிப்படையில், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் மற்றும் கொண்டகான் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) தேடுதல் வேட்டை நடத்தியது. அபுஜ்மத் பகுதி கோவா மாநிலத்தை விட பெரிய அளவிலான நிலமாகும்.

இதன் பெரும்பகுதி நாராயண்பூரில் இருந்தாலும், பிஜாப்பூர், தண்டேவாடா, கான்கர் மற்றும் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டம் வரை பரவியிருக்கிறது.
கடந்த மாதம் 21-ம் தேதி ஹித்மா மத்வி உள்பட உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் மற்றும் முக்கியமானவர்கள் கர்ரேகுட்டா மலைகளில் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அன்று முதல் தேடுதல் நடவடிக்கைகளத் தொடங்கினர். தொடர்ந்து மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.