குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!' - காரணம் `டிக் டாக்?!' - சுவாரஸ்ய பிண்ணனி
அமெரிக்கா - சீனாவிற்கு இடையே உள்ள நேரடிப்போர், மறைமுகப்போர் அனைத்தும் உலகம் அறிந்ததே. ஆனால், 'ஆடு பகை குட்டி உறவு' என்ற பழமொழிக்கேற்ப, அமெரிக்க மக்கள் சமீப காலமாக சீன மொழியான மாண்டரீனை கற்றுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. இந்தத் தகவலை டியோலிங்கோ என்னும் ஆப் வெளியிட்டுள்ளது.
உலகில் உள்ள பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள `டியோலிங்கோ ஆப்' உதவுகிறது. இந்த ஆப் சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ``டியோலிங்கோ ஆப்பில், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மாண்டரின் படித்து வருகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜனவரி 13-ம் தேதி வரை கிட்டதட்ட 216 சதவிகிதம் அதிகரித்துள்ளது." என்று தெரிவித்ததுடன், 'இதற்கு டிக் டாக் தடை தான் காரணமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவில் எப்படி டிக் டாக் ஆப்பிற்கு ஃபேன்கள் குவிந்துக்கிடந்தார்களோ, அதே போல, அமெரிக்காவிலும் டிக் டாக் ஆப் மிகவும் பிரபலமானது. ஆனால், சமீபத்தில் அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பை தடை செய்தார்கள்.
இதனால், அமெரிக்க மக்கள் 'ரெட் நோட்' என்று அழைக்கப்படுகிற டிக் டாக் போன்ற இன்னொரு சீன ஆப்பிற்கு தாவி வருகின்றனர். ரெட் நோட் ஆப் முழுக்க முழுக்க சீனர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. அதனால், அந்த ஆப் மாண்டரின் மொழியில் தான் இருக்கும். ஆக, அந்த ஆப்பைப் பயன்படுத்துவதற்காக, அமெரிக்கர்கள் சீன மொழி படித்து வருகின்றனராம்!