தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன்
Coolie:``இரண்டு வருடமாக No Family, No Friends, No Social media; காரணம்..." - லோகேஷ் கனகராஜ்
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் `கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருந்தது.
`லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கன்னட செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டியில், ``கூலி திரைப்படம் உருவான கடந்த 2 வருடங்களாக, நான் திரைப்பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
என் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, சமூக ஊடகங்களுடனோ என எதற்கும் நேரம் கொடுக்கவில்லை. எனது 36 - 37 வருட வாழ்க்கையில், கூலி படத்திற்காகப் பெரும் உழைப்பைப் போட்டிருக்கிறேன்" என்றார்.
இப்படத்தின் சர்வதேச விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.86 கோடிக்கு வாங்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...